Ads Area

விமானத்தில் நடக்கும் அருவருப்பான விஷயங்கள்..airplanes

  விமானப் பயணம் அனைவருக்கும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கும் பயணிகள் சிலர் அருவருப்பான செயல்களை விமானப் பணிப்பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ள நிலையில் , இப்படி எல்லாம்கூட செய்வார்களா என முகம் சுழிக்கவைக்கின்றது.


அமெரிக்காவின் சொகுசு விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஏர் ஹோஸ்டஸ் மரிகா மிகுசோவா என்பவரே தான் எழுதிய புத்தகத்தில் , 36000 அடி உயரத்தில் பயணிகள் செய்யும் விசயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.


டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்

விமானப் பணிப்பெண் மரிகா மிகுசோவா தனது 'டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்' என்ற புத்தகத்தில் மிகவும் அருவருக்கத்தக்க சில விஷயங்களைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.


விமானத்தில் சிறுநீர் பையை  விட்டுச் செல்லும் பயணிகள்


ஒருமுறை துருக்கி பயணத்தின் போது, ​​மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறினார். அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில், துப்புரவு பணியாளர்களும் ​​முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். ஏனெனில் முழுமையாக சுத்தம் செய்ய நேரமிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.


டவலால் அக்குளை துடைத்த இந்திய பயணி 

இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை ஒரு பயணி இதை விட அதிகமாக சென்றார். நான் பயன்படுத்திய டவலைக் கேட்டதும், அவர் தர மறுத்து, அந்த டவலால் அக்குளை துடைக்க ஆரம்பித்தார்.

பின்னர் அந்த அசுத்தமான துண்டு என்னிடம் தரப்பட்டது. நான் முதலில் வாங்க தயங்கினேன், பின்னர் அந்த டவலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தேன்.

உணவு உண்ணும் போது  டயப்பர் மாத்தும் தாய்மார்

அதுமட்டுமல்லாது பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ​​ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கினார்.

சிறிது நேரம் காத்திருக்கும்படி அவர்களுக்கு சைகை காட்டினேன். ஆனால் அந்த பெண் பிரச்சனை இல்லை, என் வேலை முடிந்தது, என்றாள். ஆனால் அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள்.

சில நேரங்களில் பெற்றோர்கள் இருக்கை பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே தங்களுடன் சக பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, இவ்வாறான விஷயங்களை  முற்றிலும் கைவிட வேண்டும் எனவும் அவர்  தெரிவித்திருக்கிறார்.  



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe