Ads Area

Online மூலம் சம்மாந்துறை உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில்.


முஸ்தபா சுலைமாலெப்பை (SLIATE)


Online மூலம் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தலில் சிரமங்களை எதிர் கொள்வோருக்கு உதவியளிக்கும் செயற்திட்டம்.


சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல்  கல்வி நிறுவகத்தில் (SLIATE ), உயர் தேசிய டிப்ளோமா (HND) கற்கை நெறியை முழு நேரமாக / பகுதி நேரமாக கற்க விரும்பும் மாணவர்கள் தங்களது online விண்ணப்பங்களை, எதிர்வரும் 20.06.2023 தொடக்கம் 24.06.2023 வரை (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி) ஆகிய தினங்களில் மு.ப. 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை, வர்த்தமானி அறிவித்தலில் கோரப்பட்டுள்ள தகமைச்சான்றிதழ்கள் (மூலப்பிரதி - Original), மற்றும் வங்கியில் வைப்பிலடப்பட்ட பதிவுக்கட்டணத்திற்கான SLIP (ATM அல்லது Online மூலமான பண பரிவர்த்தனைகள் ஏற்கப்படமாட்டாது) ஆகிய ஆவணங்களுடன் சம்மாந்துறை (ATI) கல்லூரிக்கு சமூகமளித்து  விண்ணப்பிக்க முடியும்.


உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA), உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா(HNDE),உயர் தேசிய தகவல் தொழிநுட்ப டிப்ளோமா (HNDIT), உயர் தேசிய முகாமைத்துவ டிப்ளோமா (HNDM) கற்கை நெறிகளுக்கு  விண்ணப்பிக்க முடியும்.


 கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்


 1.தேசிய அடையாள அட்டை (NIC)

 2.க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபோறு (GCE A/L Results Sheet)

 3.க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு

 (GCE O/L Results Sheet)

4.வங்கியில் வைப்பிலடப்பட்ட பதிவுக்கட்டணத்திற்கான SLIP (Paid Bank Slip)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe