சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பொது சத்திர சிகிச்சை நிபுணர் Dr. என்.அகிலன் அவர்கள் நாபிர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களிடம் வைத்தியசாலைக்கு அவசர தேவையாக உள்ள படுக்கை விரிப்பு தேவை தொடர்பாக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்
இதன் அடிப்படையில் இன்றைய தினம் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் புதல்வர் நஸீம் ஆரிப் அவர்களினால் ஒரு தொகுதி படுக்கை விரிப்புகள் Dr.நக்கீர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.


