ரியாத்:
சவுதியில் விவாகரத்து பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சவுதி பொதுப் புள்ளியியல் ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சவுதி பெண்கள் அறிக்கை 2022 தெரிவிக்கின்றது.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் 30-34 வயதுக்குட்பட்டவர்கள். இந்த வயதில் 54,000 பேர் விவாகரத்து பெற்றுள்ளனர். 35-39 வயதுக்குட்பட்ட 53,000 க்கும் அதிகமானோர் விவாகரத்து பெற்றுள்ளனர். 2022ல் 2,03,469 பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.