Ads Area

பயமின்றி போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குங்கள் - பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம.


 பாறுக் ஷிஹான்


 விசேட போதைப்பொருள் ஒழிப்புத்திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மாஅதிபரின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன.


அப்பணிப்பின் கீழ் விசேட போதைப்பொருள் ஒழிப்பு குழுவொன்றை அமைத்து அக்குழுவினூடாக  பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளங்கண்டு நடவடிக்கையெடுப்பதற்குமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்  தலைமையில் நடைபெற்றது.


இதன் போது, பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன், போதைப்பொருள் தொடர்பில் உறுதியான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு    பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இக்கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாகிகள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் ஆலோசனைக் குழுவினர், சமூக சேவகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தத்தமது ஆலோசனைகளை குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe