சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில் கடையினுள் வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் ,2 பசளைகள் என்பன கடை கதவு உடைக்கப்பட்டு நேற்று (26) திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் வழிகாட்டுதலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறையில் இருந்து வருகை தந்த தடயவியல் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.