Ads Area

சம்மாந்துறையில் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகளை வீதிகளில் தொந்தரவு செய்தால் நடவடிக்கை.

சம்மாந்துறை நிருபர் - Muhammed Nasim


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு,தொலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.


பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள்வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸார் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.


இளைஞர்கள் போக்குவரத்து நடை முறைகளை மீறி உள்வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து, சாரதி மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களை தன்வசம் வைத்திருக்குமாறும் கேட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe