Ads Area

சவூதி அரேபியாவின் முதல் சர்வதேச மியூசிக் அகாடமி தாயிப் (Taif) நகரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் முதல் முறையாக சர்வதேச மியூசிக் அகாடமி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நஹவந்த் சென்டர் என அழைக்கப்படும் இந்த மியூசிக் அகாடமி சவுதி அரேபியாவின் தாயிப் (Taif) நகரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் ரஷ்ய நாட்டின் மிகப் பழமையான Gnesins Russian Academy of Music உடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது சவுதி அரேபியா.


ரஷ்ய  Gnesins Russian Academy ஆனது மாஸ்கோவில் உள்ள சிறந்த இசைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது ரஷ்யாவின் மிக முக்கியமான சர்வதேச இசை அகாடமிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் இது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பல கிளைகளைக் கொண்டுள்ளது. 120 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலகின் பழமையான கல்விக்கூடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 


செய்தி மூலம் - https://saudigazette.com.sa









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe