Ads Area

தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவித்தல்.

 பாறுக் ஷிஹான்.


தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில்  வளாக மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி மாதம் சனிக்கிழமை (10), ஞாயிற்றுக்கிழமை (11) இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில் இரண்டு நாட்களும் தலா 3 அமர்வுகளாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக இப்பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முதலாவது நாளின் முதலாவது அமர்வில் கலை, கலாசார பீடத்தினைச்சேர்ந்த 342 மாணவர்களும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிபீடங்களைச்சேர்ந்த 355 மாணவர்களும் மூன்றாவது அமர்வில்  பிரயோக விஞ்ஞான, பொறியியல் மற்றும் தொழிநுட்பபீடங்களைச்சேர்ந்த 430 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.


இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11) நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச்சேர்ந்த 314 பட்டதாரிகளும் ஐந்தாவது அமர்வில் கலை, கலாசார பீடங்களைச்சேர்ந்த வெளிவாரிப்பட்டதாரிகள் 350 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், ஆறாவது அமர்வில் கலை, கலாசார மற்றும்  முகாமைத்துவபீடங்களைச்சேர்ந்த வெளிவாரிப் பட்டதாரிகள் 361 பேர் மற்றும் 1,414 உள்வாரி, 711 வெளிவாரிப்பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2,152 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe