இந்த வருடம் ஜூன் மாதத்திற்குள் டொலரின் விலை 280 ரூபாவை எட்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டொலரின் விலை குறைவினால் பொருட்களின் விலைகள் குறைவடையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
"அடுத்த ஆண்டும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாடு சவாலான காலகட்டத்தை கடந்துள்ளதாகவும், இந்த நிலைமையை சமாளிக்க கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது நாம் சில நிவாரணங்களை வழங்கக்கூடிய ஒரு நிலையை அடைந்துள்ளோம் என ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கேகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க மாங்கெதர தெம்பிட்ட விகாரைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பொதிகரா மற்றும் தங்க வேலியை புதன்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.