Ads Area

உலகின் மிகச் சுறுசுறுப்பான விமான நிலையமாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தின் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுப்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.


ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


கனமழை காரணமாக சென்னையில் இருந்து அந்நாட்டுக்கு இயக்கப்படும் 5 விமானங்கள் இன்று(17/04/24) புதன்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களின் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டு வருகின்றது.


மேலும், உலகின் மிகச் சுறுசுறுப்பான விமான நிலையமாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தின் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.


இந்த நிலையில், சென்னையில் இருந்து துபை உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாட்டுக்கு இயக்கப்படும் 5 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe