Ads Area

வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய ஆசிரியை நான்கு நாட்களின் பின் கைது.

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.


இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.


காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.


இந்நிலையில் வவுனியா  ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe