சவுதி அரேபியாவில், எவரேனும் பிறருக்கு விசிட் விசா வழங்கினால், அவர்கள் விசா தேதி காலாவதி ஆவதற்குள் நாட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். எவரேனும் அவ்வாறு வெளியேறாமல் காலதாமதம் ஆகி நாட்டில் தங்கினால் ஐம்பதாயிரம் ரியால் வரை அபராதமும் ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.
விசா வழங்கியவர்கள் வெளிநாட்டினராக இருந்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து வகையான விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என சவுதி பொது பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவில் உள்ளவர்கள் ஜூன் 21 வரை மக்காவிற்குள் நுழையக்கூடாது என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.