Ads Area

காணி உத்தியோகத்தர் லாபிர் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்.

நிந்தவூர் 02 வன்னியார் வீதி, இலக்கம் 11B இல்  வசிக்கும் இப்றாலெவ்வை லாபிர்,  அகில இலங்கை சமாதான நீதவானாக நேற்றைய தினம் (22.05.2024) கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 


நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வியைப் பயின்று, பின்னர் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் தனது உயர்கல்வியினைத் தொடர்ந்தார். 


Sri Lanka School of Agriculture (இலங்கை விவசாயப் பாடசாலை) யில் Agriculture Diploma கற்கைநெறியை பயின்ற இவர்,  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்   முகாமைத்துவ சான்றிதழ்  பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.


24 வருட தனது அரச சேவையில் தற்பொழுது இவர் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். 


சிறந்த சமூக சேவையும், நல்லொழுக்கமும் உள்ள இப்ராலெவ்வை லாபீர் அவர்கள் மர்ஹூம் அலியார் மரைக்கார் இப்றாலெப்பை மற்றும் அஹமது மக்பூல் றசீனா உம்மா ஆகியோரின்  முதல்வராவார்.


தகவல்: சுலைமான் றாபி.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe