Ads Area

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் புதிய அதிபராக TKM. சிராஜ் கடமைப் பொறுப்புக்களை ஏற்றார்.

அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபராக கடமை புரிந்த MIM. சய்புத்தீன் அவர்கள் 36 வருட அரச சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றிய TKM. சிராஜ் அவர்கள் புதிய அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். 


புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட TKM. சிராஜ் அவர்களுக்கு பாடசாலையின் உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பாடசாலை பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக்குழு, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 


பாடசாலை ஊடகப் பிரிவு

கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் 

சாய்ந்தமருது.


Al-Jalal Maha Vidyalaya - Sainthamaruthu



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe