இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக ஐ.எல்.எம்.றசாக் அவர்கள் இன்று 2024.08.12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நிரந்தரமாக தனது கடமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இறக்காமம் பிரதேச செயலகத்தில் ஏற்கனவே நிருவாக உத்தியோகத்தராக மிக சிறப்பாக கடமையாற்றிய எம்.எம்.எம்.தௌபீக் அவர்கள் Pension ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக நிருவாக உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நிருவாக உத்தியோகத்தரை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரிவுத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.