சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் வகுப்பறை அலங்காரப் போட்டி நிகழ்வானது 2024.08.07 புதன் கிழமை பாடசாலை அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நடுவர்களாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், வளவாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்ப பிரிவு, இடைநிலைப்பிரிவு என இரு பிரிவுகளாக பிரித்து போட்டி இடம்பெற்றது.
இதில் ஆரம்பப் பிரிவில் தரம் 1 வகுப்பாசிரியை Mrs.M.A.ஜாபிறா 1 ஆம் இடத்தையும், தரம் 2 வகுப்பாசிரியை Mrs.U.L.ஹபீபா 2 ஆம் இடத்தையும், தரம் 3 வகுப்பாசிரியை Mrs.S.M.ஹஸீனா பானு 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இடைநிலை பிரிவில் தரம் 10 வகுப்பாசிரியை Mrs.I.L.H.F. சங்கீறா 1 ஆம் இடத்தையும், தரம் 9 வகுப்பாசிரியை Mrs.M.M.ஷரீக் 2 ஆம் இடத்தையும், தரம் 7 வகுப்பாசிரியை Mrs.A.M.ஐனுல் றாசியா 3 ஆம் இடத்தையும் தட்டிக் கொண்டனர்.