Ads Area

ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இயங்காமை தொடர்பில்.

இயங்காமல் காணப்படும் ஓட்டமாவடி மணிக்கூட்டு நேரம் காட்டியைத் திருத்தம் செய்வதற்கான பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் ஹொட்லைனுக்கு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


குறித்த கோபுரத்திலுள்ள மணிக்கூடு பழுதடைந்தமை தொடர்பில் உடனடியாக அவதானஞ்செலுத்தி, எமது சபையின் தொழிநுட்பக்குழுவினர் அதனைச்சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதனைச்சரி செய்ய முடியவில்லை. 


மேலதிக உதவிக்காக கொழும்பிலுள்ள பராமரிப்பு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதனைச்சரி செய்ய முடியும்.


அதே நேரத்தில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினைத்தொடர்பு கொண்டு உண்மைத்தன்மை, இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறியாமல், சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டு வீண் விமர்சனங்களுக்கு வழியேற்படுத்தியுள்ளமை கவலையளிக்கின்றது.


இனி மேலாவது இவ்வாறான விடயங்களை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட தரப்பினரை நாடி உண்மைத்தன்மை என்னவென்பதை அறிந்து வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என  செயலாளர் மேலும் தெரிவித்தார். 


இவ்வறிக்கை வெளிவரும் போது சபையின் தொழிநுட்பக்குழுவினரும் ஊழியர்களும் பராமரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதைக்காண முடிந்தது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe