Ads Area

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்வரும் 31 ஆம் திகதி சம்மாந்துறைக்கு விஜயம், மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் தேதி சம்மாந்துறையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Ranil Wickremesinghe சம்மாந்துறைக்கு வருவதை முன்னிட்டு இடம்பெரும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான இடத்தை தெரிவு செய்யும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் அவர்களது தலைமையில்  கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த கள விஜயத்தில் தேசிய காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதியை வெல்ல வைப்பதற்கு இணைந்திருக்கும் சகல அரசியல் கட்சிகளினதும் பிரமுகங்களினதும் ஆதரவாளர்கள் பலர் உட்பட ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார பிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe