ரிசாத் பதியுதீன் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்தமையை தனிப்பட்ட ரீதியில் நான் வரவேற்கிறேன்.
காரணம், ரிசாதின் கட்சி இன்று வரை சஜித்தின் கூட்டிலேயே உள்ளது. இந்த நிலையில் திடீர் என வேறு பக்கம் பல்டி அடிப்பது நல்லதில்லை.
ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அக்கூட்டணி பிடிக்காவிடில் முதலில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும். அதன் பின் யாருடனும் சேரலாம்.
மாறாக கூட்டணியில் இருந்து கொண்டே ரகசியமாக பேசி பல்டி அடிப்பது சமூகத்துக்கு அவமானத்தை தரும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இப்படித்தான் செய்தது.
ரிசாத் பதியுதீனின் தற்போதைய தீர்மானம் யாருக்கு வெற்றி என்பதற்கப்பால் சமூகத்துக்கான கெட்ட பெயரை தவிர்த்துள்ளது.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
ஸ்தாபக தலைவர்
ஸ்ரீலங்கா உலமா கட்சி