தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் மூலோபாயக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதா அல்லது இறக்குமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போது தம்மை விவாதத்திற்கு அழைக்கிறார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
NPP யின் முறையான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்கு தெளிவுபடுத்துவதற்காக கட்சி உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் திஸாநாயக்க முதலில் விவாதம் நடத்த வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
அனுர என்னை ஆனமடுவையில் ஒரு விவாதத்திற்கு அழைத்துள்ளார், ஆனால் அவர்களின் பொருளாதார உத்தி ஏற்றுமதி அல்லது இறக்குமதியில் கவனம் செலுத்துகிறதா என்பதை அறியாமல் நான் எவ்வாறு பங்கேற்க முடியும்? எனவே, முன்னாள் விவசாய அமைச்சர்களான அநுர திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கியதா அல்லது இறக்குமதிப் பொருளாதாரத்தை நோக்கியதா என்பதை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கிடையில் விவாதத்தை நடாத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலுக்கான நேரத்தை நிர்ணயிக்க முடியும் என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார். .
“இது தெளிவுபடுத்தப்பட்டவுடன், நான் முன்னர் குறிப்பிட்டது போல், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் என்னுடன் வீடியோ கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
“தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்க வேண்டும். எனினும், சஜித் பேசுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பார்வையாளர்களிடம் உரையாற்றும் சந்தர்ப்பம் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சஜித்துக்கு அழைப்பை விடுப்போம்’’ என்றார்.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்களுடன் நேற்று (10) குருநாகல் அஸ்லியா கோல்டன் கசாண்ட்ரா ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 8900 பில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டு 4,900 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக பெறப்படுவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
நாலாயிரம் பில்லியன் ரூபாய்கள் நஷ்டமாக காட்டப்பட்டுள்ளது.
8900 #பில்லியன் முதலீடு செய்து வரிச் சலுகைகளையும் அளிப்பதால் 4000 பில்லியன் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வரிச் சலுகையினால் ஏற்படும் நட்டம் மொத்த தேசிய உற்பத்தியில் 11.5% ஆகும். இவர்கள் எவ்வாறு நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை மீறினால் நாங்கள் பணத்தை பெற்றுக் கொள்வதற்கு வேறு சந்தைகளை நாட வேண்டிவரும்.
அவ்வாறு வருகின்ற பொழுது சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டித் தொகையின் விகிதத்தை விட ஏனைய வழிகளில் இருந்து பணத்தை கடனாகப் பெறுகிற பொழுது 25 % வட்டியை செலுத்த வேண்டி வரும்.
மேலும் அப்படி ஒரு நிலைமை ஏற்படுமாயின் டொளரின் பெறுமதி 500 ரூபாவுக்கும் அதிகமாக மாறும்வதுடன் இது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும்.
“மேலும், IMF உடனான எங்கள் ஒப்பந்தங்களை மீறி, சந்தையில் இருந்து நிதியை நாடினால், வட்டி விகிதம் 25% ஆக உயரக்கூடும். இதன் விளைவாக டாலரின் மதிப்பு ரூ.500 ஆக உயரக்கூடும், மேலும் எங்களது ஒப்பந்தங்களை மீறியதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்க நேரிடும், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று ஜனாதிபதி எச்சரித்தார்.
மேடைகளில் வெற்றுப் பேச்சுக்கள் மற்றும் வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து, திஸாநாயக்க தெளிவான மற்றும் சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"பொருளாதார முறைகேடு மற்றும் தேசிய திவால்நிலைக்கு பங்களித்தவர்களுக்கு ஏன் நிதியுதவி வழங்கப்படுகிறது என்று நான் அனுர திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்புகிறேன்" என்று விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk