Ads Area

மறுஅறிவித்தல் வரும் வரை கடலுக்குச்செல்ல வேண்டாம் - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்.

 பாறுக் ஷிஹான்.


மீனவர்கள் மறுஅறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாறாமல் விழப்புடன் இருக்குமாறும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,


சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம். சூறாவளி உருவாகி கல்முனையைத்தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.


மேலும், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புக்காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe