Ads Area

திருடர்களின் அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

கடந்த சில நாட்களாக சம்மாந்துறை, காரைதீவு, வீரமுனை, சவளைக்கடை, கல்முனை, மருதமுனை, மண்டூர் போன்ற பகுதிகளில் இரவு வேளையில் வீடுகளை உடைத்து நகை, பணம் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவை திருடுவது அதிகரித்தவாறு உள்ளது.


இச் சம்பவம் (அதிகாலை 1:00 மணி முதல் அதிகாலை 4:30 மணிக்கு) இடைப்பட்ட வேளையில் வீட்டின் கிரில்களை மற்றும் ஓட்டினை பிரித்து வீட்டில் ஆட்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதும் இச் சம்பவம்  இடம் பெறுகிறது.


மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்தவாறு உள்ளது பெரும்பாலான இடங்களில் வயல் வேலை அதிகரித்து உள்ளதால் வீதி ஓரங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதாலும், முச்சக்கர வண்டியில் பொருட்களை வைத்து விட்டு செல்வதாலும் இச் சம்பவம் அதிகமாக இடம் பெறுவதுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எனவே இரவு நேரத்தில் தூங்குவதற்கு முதலில் வீட்டில் மறைவான இடங்களை  பரிசீலனை செய்ததன் பின்னர் தூங்கச் செல்லவும், வீட்டின் கிரில் களை வடிவுக்கு இல்லாமல் பாதுகாப்பாக இருக்கக் கூடிய வகையில் உருவாக்கி பயன்படுத்தவும்.


சீலிங் பேன் பயன்படுத்தும் வீடுகளில் தான் அதிகமாக திருட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது எனவே அதிகம் சத்தம் இடும் மின் விசிறிகளை பயன்படுத்த வேண்டாம்.


தேவை இல்லாமல் பகல் வேளையில் அல்லது இரவு வேளையில் மாஸ்க் அணிந்து தொப்பி போட்டுக் கொண்டு அல்லது தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்.


உங்கள் பகுதியில் சந்தேகமாக யாராவது நடமாடினால் அது தொடர்பாக அவதானமாக இருக்கவும்.


உங்கள் பகுதியில் சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்தவர்கள், வெளியூரில் இருந்து வரும் நபர்களை அழைத்து கொண்டு ஒன்றாக சுற்றித்திரிந்தால் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும்.


அதுமட்டுமின்றி வெளியூரில் இருந்து வரும் நபர்கள் உங்களை தாக்கவும் எந்த உரிமையும் இல்லை என்பதோடு உங்கள் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாப்பது உங்கள்  உரிமையாக  உள்ளது.


எனவே இச்சம்பவம் தொடர்பான நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உள் பெட்டியின் ஊடாக தகவல் தரவும் இரகசியம் 100% பாதுகாக்கபடும்.


மேலும் இப்படிப்பட்ட சம்பவங்களை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe