வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான தந்தை மற்றும் மகன் இருவரையும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககுனாவெல இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பந்துல பியல் மற்றும் அவரது மகன் மாதவ சுதர்சன ஆகியோருக்கே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த வெல்லம்பிட்டிய பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் நீண்டகாலமாக தகராறு இருந்ததற்கான சாட்சியங்கள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற லக்சட செவன வீடமைப்புத் தொகுதியில் இருந்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு குற்றம் நடந்த இடம் மற்றும் இறந்தவரின் உடல் இரண்டையும் கூடுதல் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.