Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 நூருல் ஹுதா உமர்.


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


ஏற்கனவே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய டாக்டர் எஸ்.டீ.டீ.சன்ட்ரூவான் இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்து கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.


இதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தற்பொழுது கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராக நியமனம் பெற்ற டாக்டர் என்.டபள்யூ.அரவிந்தவினால் இச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் அரவிந்த் அவர்களினால் அண்மையில் (28) முதலாவது கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 


குறித்த சத்திர சிகிச்சையினை மீள ஆரம்பிப்பதற்கும் அந்த சேவையினை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தேவையான மருத்துவ உபகரணங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.


பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவிற்கமைவாக உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் துரிதமாக செயல்பட்டு குறித்த மருத்துவ உபகரணங்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe