Ads Area

மனைவி தகாத உறவு - அவரின் அந்தரங்க உறுப்பில் அயன்பொக்ஸினால் சூடு வைத்த கணவர் கைது.

மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


34 வயதுடைய கணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்துகொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


காயமடைந்த 27 வயதுடைய மனைவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட கணவன் கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe