Ads Area

150 கோடி ரியால் செலவில் அரபுலகின் பிரமாண்ட சினிமா சவுதியில் தயாரானது.

அரேபிய சினிமா வரலாற்றின் மிகப் பிரமாண்டமான சினிமாவிற்கு சவுதி அரேபியா சொந்தமாகிறது. சுமார் 150 கோடி ரியால் செலவில் தயாராகும் 'தி செவன் டாக்ஸ்' திரைப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்தது. முழு நீள த்ரில்லர் படமான இதன் சூட்டிங் முழுவதும் ரியாத் பிக் டைம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 


சவுதி பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்க்கி அல் ஷேக் இதன் தகவல்களை வெளியிட்டார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவித்தார். இதுபோன்று மேலும் 5 திரைப்பட திட்டங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe