ஏ.எஸ்.எம்.நுஸைப் (ஏறாவூர்)
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டதாககூறப்படும் மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதி கோரியும் இனியும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்யக்கோரியும், பாடசாலைகளில் உளவியல் கட்டமைப்பை வலிமைப்படுத்தக்கோரி மக்கள் போராட்டம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் பங்கேற்றனர்.
இம்மாணவியின் மரணத்தின் மீது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மரணத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனைகளை விரைவில் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.