சவுதி அரேபியாவின் அல்கோபரில் வசித்து வரும் ஹைதராபாத்தைச் சார்ந்த சைதா ஹூமைரா அம்ரீன் என்ற பெண் ஒருவர், தனது மூன்று குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அதிலிருந்து உயிர் தப்பிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம்மது சாதிக் அஹமது (6), முகமது ஆதில் அகமது (6) மற்றும் முகம்மது யூசுப் அஹமது (3) ஆகிய தனது சொந்தக் குழந்தைகளை மூச்சுத் திணற வைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர், அவர் தற்கொலை செய்ய முயன்ற போது மயங்கிய நிலையில் அவரது கணவரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார. குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இதனை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.