குவைத் வரலாற்றில் குடும்ப விசிட் எடுக்க தேவையான பல கட்டுப்பாடுகள் கடந்த வாரம் நீக்கப்பட்டதால் சாதாரண தொழிலாளர்களும் தங்களுடைய குடும்பத்தை அழைத்துவர முடியும் என்பதால் வெளிநாட்டினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையி்ல் அதில் இருந்த ஒரு குறை அதிகபட்சமாக 1 மாதகாலம் மட்டுமே தங்க முடியும் என்பது, இந்நிலையில் அதற்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை வெளிநாட்டினருக்கு குவைத் அரசு அளித்துள்ளது.
ஆம் இனிமுதல் சிங்கிள் என்டிரி குடும்ப விசிட் விசாவில் குவைத் வருகின்ற உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை தொடர்ச்சியாக 3 மாதங்கள் குவைத்தை விட்டு வெளியேற்றாமல் உங்களுடன் தங்க முடியும்.
"குவைத் விசா தளம்" வழியாக நேற்று(17/08/25) ஞாயிற்றுகிழமை முதல் விசா எடுத்தவர்களுக்கு புதிய மாற்றம் அடிப்படையிலான விசா கிடைக்க தொடங்கியுள்ளது. அதேநேரம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் வரையிலான மல்டிபிள் என்ட்ரி குடும்ப விசிட் விசாவில் வருகின்ற குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக 1 மாதங்கள் மட்டுமே குவைத்தில் தங்க முடியும், அதன் பிறகு நாட்டை விட்டு வெளியேறி விசா காலாவதியை பொறுத்து எவ்வளவு முறை வேண்டுமானாலும் குவைத்தில் மீண்டும் நுழைய முடியும்.
அதேநேரம் குடும்ப விசிட் விசா எடுக்க நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச சம்பள வரம்பு 400 தினார்கள் என்ற கட்டுப்பாடு மற்றும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான Kuwait Airways மற்றும் Jazeera Airways ஆகிய விமான நிறுவன விமானங்களில் மட்டுமே பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மற்றும் பல்கலைக்கழக பட்ட படிப்பு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் கடந்த வாரம் முதல் நீக்கப்பட்டது. அதேபோல் நிறைய நபர்களின் சந்தேகம் வீட்டு வேலை விசாவில்(Article-20) உள்ளவர்களுக்கு குடும்ப விசிட் எடுக்க முடிமா...? கண்டிப்பாக எடுக்க முடியாது, காரணம் நீங்களே Already டிப்பன்டிங் விசாவில் தான் குவைத்திற்கு வந்து வேலை செய்து வருகிறீர்கள் என்பதால். அதேநேரம் கம்பெனி(Article-18) விசாவில் உள்ள எவ்வளவு குறைந்தபட்ச சம்பளம் உள்ள அனைவரும் குடும்ப விசிட் விசாவை எடுக்க முடியும். அதேபோல் குவைத்தில் வேலை செய்கின்ற பெண்களுக்கு தங்களை Sponsoreஆக காட்டி விசா எடுக்க முடியாது அரிதிலும் அரிதாக சில கேசில், சம்மந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் அனுமதியுடன் விசா கிடைக்கும்.
குடும்ப விசிட் விசா எடுக்க தாய்,தந்தை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழும், மனைவி என்றால் திருமண சான்றிதழும் தேவை(Note: Kuwait Visa தளத்தில் பதிவேற்ற தேவையான ஆவணங்கள் கண்டிப்பாக அரபு மொழியில் மொழி பெயர்கபட்டு இருக்க வேண்டும்)