Ads Area

சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு!

 தில்சாத் பர்வீஸ்.

 

சம்மாந்துறை, இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (16) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் - ஹிஜ்றா ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.


போதைப் பொருட்களின் தாக்கங்கள், போதைப் பொருளினால் சமூகத்திற்கு ஏற்படும் அழிவுகள், போதைப் பொருளை தடுப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள், போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்  போன்ற பல விடயங்கள் பற்றி தெளிவு படுத்தப்பட்டது.


இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சீ.ஏ.அசீஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர், முன்னாள் அமைச்சின் செயலாளரும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் எம்.ஐ. அமீர், வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, சம்மாந்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை அழிப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.இக்ராம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe