நூருல் ஹுதா உமர்.
பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்குமுகமாக ஸ்கை தமிழ் அமைப்பின் ஓரங்கமாக இயங்கும் ஸ்கை லங்கா கல்லூரி ஏற்பாடு செய்த அகில இலங்கை ரீதியிலான மருதாணிப்போட்டியானது ஸ்கை லங்கா கல்லூரியின் முகாமையாளரான ஆஷிகா பர்ஸான் தலைமையில் செப்டம்பர் 7ம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பிக்கும் முன் எல்லே பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இப்போட்டியில் 50இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். நடுவராக ஹப்ஸா ரிகாஸ் செயற்பட்டு, இதில் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
முதலிடத்தைப்பெற்ற ரம்லா அப்ஸல்தீன், இரண்டாமிடம் பெற்ற பாத்திமா ஹுஸ்னா ஹுஸைன், மூன்றாமிடத்தைப் பெற்ற பாத்திமா மிப்ராஹ் முஆத் ஆகியோருக்கு பணப்பரிசில், வெற்றிச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
மேலும் போட்டியில் சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு துறைகளைச்சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், ஸ்கை தமிழ் ஊடக உறுப்பினர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.