தேசிய மட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ள சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் மேசைப்பந்தாட்ட (Table Tennis) அணியினருக்கு மேலங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (12) அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ் நளீமி (SLPS-1) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அதிபர், கல்வி மற்றும் இணைப்பாடவிதான பொறுப்பாசிரியர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
குறித்த மேலங்கிக்கான அனுசரணையினை கல்லூரியின் பழைய மாணவனும் அணி வீரரொருவரின் தந்தையும் SL & Sons Hardware உரிமையாளருமான எஸ்.எல்.ஜவ்பர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி இருந்தார்.
தேசிய மட்டப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மேசைப்பந்தாட்ட மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக குறித்த புதிய மேலங்கியை வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மேலங்கி வழங்கி வைத்த எஸ்.எல்.ஜவ்பர் அவர்களுக்கு பாடசாலைச்சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மட்டப்போட்டிகள் எதிர்வரும் 15, 16, 17ம் திகதிகளில் பாணந்துறை, பண்டாரகம உள்ளக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மாணவர்கள் தேசியத்திலும் பிரகாசிக்க பாடசாலை சமூகத்தினர் வாழ்த்திப் பிரார்த்திக்கின்றனர்.
தகவல்:
STR-MMMV
Physical Education Unit.