Ads Area

தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி சம்மாந்துறை மல்வத்தை சந்தியில் ஆர்ப்பாட்டம்.

( காரைதீவு  சகா)


தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி   தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் நேற்று (13) திங்கட்கிழமை காலை சம்மாந்துறை  மல்வத்தைச் சந்தியில்  முன்னெடுக்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்ட மக்கள் பல வித சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி குரல் எழுப்பினர். தமக்கு நேர்ந்த கதியை விளக்கி ஜனாதிபதிக்கு முறைப்பாடு கடிதங்களை அனுப்பி வைத்தனர்.


அவர்கள் கூறுகையில்.


1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் நிமித்தமாக எமது வாழ்விடங்கள், விவசாய நிலங்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமூகமான நிலையைத் தொடர்ந்து வருகை தந்து பார்த்தோம்.


எம்மிடம் போதுமான ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கத்தக்கதாக சுமார் 57 பேரின்  விவசாயக் காணிகளை அபகரித்திருந்தனர்.


அதேபோன்று மல்வத்தை திருவள்ளுவர்புரம் மக்களில்1990 களில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளில் இடம்பெயர்ந்து சென்ற 11 குடும்பங்களின் குடியிருப்புக் காணிகளைத் தனிநபர் ஒருவருமாக  அடாத்தாக அபகரித்தார்.


அத்துடன் ஆவணங்களும் ஆதாரங்களும் எதுவும் இன்றி விவசாயம் செய்து வருவதை அவதானித்தோம்.


இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலகம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு ஆளுநர் அலுவலகம் போன்றவற்றில் குறைபாடுகள் செய்தோம் .


பல அரசியல் தலைவர்களை சந்தித்து முறையிட்டோம். எதுவித தீர்வும் கிட்டவில்லை. விரக்தியுடன் உள்ளோம். பணபலம், அரசியல் பலத்தை வைத்து தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்தோம் .


தனால் தான் இன்று நாங்கள்  இணைந்து இன்றைய தினம் ஜனாதிபதியினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலே ஒரு கவன ஈர்ப்பை மேற்கொண்டதோடு ஜனாதிபதியினுடைய கவனத்திற்காக எங்களுடைய முறைப்பாடுகளை கடிதங்களாக அனுப்பி வைக்கின்ற போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம் என்றனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe