கண்புரை சத்திர சிகிச்சை தொடர்பில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது 👇👇👇
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தர கண்புரை சத்திர சிகிச்சை சேவையை ஆரம்பிப்பதற்காக பாகோ (Phaco) இயந்திரம் இன்று (18/12/25) வழங்கப்பட்டதன் மூலம் இவ்வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வியந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எமது வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் D. பிரபாஷங்கர் அவர்கள் எடுத்த முனைப்பான முயற்சிகளின் பயனாகவே இவ்வியந்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இம்முக்கிய சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான உபகரணங்களை வழங்கி, முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிய பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் (RDHS), கல்முனை மற்றும் மாகாண பணிப்பாளர், சுகாதார சேவைகள் திணைக்களம் (PDHS), கிழக்கு மாகாணம் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.
இவ்வொத்துழைப்பின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான நிரந்தர கண்புரை சத்திர சிகிச்சை சேவைகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நேர்த்தியான, தரமான மற்றும் நேரமுறை சிகிச்சைகளை நிரந்தரமாகப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவ்விடத்தில், இச்சேவையை நடைமுறைப்படுத்த உதவி புரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கும் வைத்தியசாலை ஊழியர்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

