சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகள் உடைந்த மற்றும் அரசாங்க சுற்று நிருபத்திற்கமைய வெள்ளப் பாதிப்புக்கு உட்பட்ட மக்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (10) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிதி உதவியாளர் ஏ.எம் நவாஸ், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ் அஸாருத்தீன், கிராம சேவகர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்ட இவ் நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தில் இன்று 26 நபர்களுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 45 நபர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





