நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் நோக்கில், கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிமனையை நிறுவி, நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஒருங்கிணைப்பில் 01-12-2025 அன்று பெரிய பள்ளிவாசல் காரியாலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், கல்முனையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளை, கல்முனை வர்த்தகச் சங்கம் மற்றும் பல பொது நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், நிவாரணப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நிதி உதவி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் சேகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் தங்களால் இயன்ற ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள்
பின்வரும் அத்தியாவசிய பொருட்களை நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நிலையங்களில் வழங்க வேண்டுகிறோம்:
• சாப்பாட்டு அரிசி
• பால்மா
• சிறுவர்களுக்கான பால்மா
• சீனி
• பருப்பு
• தேயிலை
• நூடுல்ஸ்
• பிஸ்கட் பக்கட்கள்
• குடிநீர் போத்தல்கள்
நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டிய கடைசி நாள்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 05-12-2025 ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நிலையங்களில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நிலையங்கள்.
1. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்
2. பாக்கியத்துஸ் ஸாலிஹாத்
3. முஹம்மதியா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்
4. யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயம்
5. மஸ்ஜிதுல் ஹைராத்
6. மஸ்ஜிதுல் ஹாமி
7. இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்
பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கான இந்த நெகிழ்வான முயற்சியில் அனைவரும் மனமுவந்து தங்களால் முடியுமான பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.
உங்களின் ஒத்துழைப்பும் உதவியும் இந்த மனிதாபிமான சேவைக்கு பெரும் துணையாக இருக்கும்.
இவ்வண்ணம்,
கல்முனை அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிமனை - 2025,
அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம்.

