சம்மாந்துறை உடங்கா - 02ல் அமைந்துள்ள ஹனா மகளிர் சங்கத்தினரின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வானது நேற்று அதாவது 16-12-2025 அன்று பிற்பகல் 4 மணியளவில் அச்சங்கத்தின் தலைவியான ஏ.முஸத்திகா என்பவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதியாக வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ரிஸ்விகான் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
ஹனா மகளிர் சங்கமானது உடங்கா - 02ல் 80 உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.




