முறையான திட்டமிடலில் சம்மாந்துறையிலிருந்து 4ம் கட்டாவிநியோகம் ஹசலக்க, மஹியங்கனை பகுதிகளுக்கு!
ஜபல் மற்றும் ஜலாலியா பள்ளிவாசல் இளைஞர் குழுவினர் கம்பளை நோக்கி துப்பரவு பணிக்காக விஜயம்!!
'டித்வா' பேரிடரின் நிவாரணப் பணிகளுக்காக சம்மாந்துறை மக்களால் வழங்கப்பட்ட நிதிகளை முறையாக சம்மாந்துறை முச் சபைகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை சிறந்த முன்மாதிரியாகும்.
தற்போது, 4ம் கட்ட விநியோகத்திற்காக 2.5 மில்லியன் பெறுமதியான அத்தியவசியப் பொருட்கள் ஹசலக்க கிம்புலாவல பிரதேசத்திற்கும், மஹியங்கனை பங்கரகம பிரதேசத்திற்கும் இன்று அங்குள்ள மக்களிடம் கையளிக்க செல்வதாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.ஐ.எம். இஸ்ஹாக் நளீமி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் எமது ஊர் மக்களால் வழங்கப்பட்ட நிதிகளை மிக முக்கிய கட்டத்தில் தேவையாக உள்ள பிரதேசங்களை கேட்டறிந்து, உரிய பள்ளிவாசல் நிர்வாகங்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் நேரடியாக பொருட்களை ஒப்படைக்கப்படுகிறது.
இதே வேளை, எமது சம்மாந்துறை ஜபல் பள்ளிவாசல் மற்றும் ஜலாலியா பள்ளிவாசல்களிலிருந்து துப்பரவு பணிக்காக கம்பளை நோக்கி இளைஞர்கள் அணி சற்று முன்னர் பயணமாகியிருக்கின்றனர்.
இந்த நிவாரணப் பணிகள் மற்றும் களப் பணிகளில் உதவி புரியும் அத்தனை உள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக!
அத்துடன், தற்போதைய சூழலில் ஏதேனும் மிகக் கடிமான இடங்களை அடையாளம் கண்டால் தன்னார்வ தொண்டர்கள் நேரடியாக எம்மோடு இணைந்து குறிப்பிட்ட இடங்களுக்கு விநியோகங்கள் மேற்கொள்ள ஒத்துழைக்கவும் என்பதுடன் எமதூரின் இளைஞர்கள் இப் பணிக்கு இன்னும் உதவ முன்வருமாறுங்கள் என அழைப்பு விடுக்கின்றேன் - என்றார்.
✍️ கியாஸ் ஏ. புஹாரி




