ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதிக்கான தலைமைக் காரியாலயம் இன்று 2018-01-25 திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தின் சார்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் தொழிலதிபர் அப்துல் ஹமீட் அன்வர் றமீஸ் அவர்களது கட்டிடத்தில் இக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
காரியாலய திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் கௌரவ எஸ். பீ. திசாநாயக்க வருகை தந்து குறித்த கிளைக் காரியாலயத்தை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் ஐ.தே.கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் ஹசன் அலியும் கலந்து கொண்டதோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.