தகவல் - ஆசிரியர் றிஸ்வான்.
தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் A.C.A.M.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (27.01.2018) நடைபெற்றது.
இந் நிகழ்வில் தரம் 11 கல்வி கற்றும் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பாகவும், 9A செயற்திட்டம் சம்பந்தமாகவும், 9 பாட சித்தி செயற் திட்டம் தொடர்பாகவும் பாடசாலை அதிபர் அவர்களினால் பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பெரும் திரளான பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.