சம்மாந்துறையின் வட்டாரப் பிரிப்பும் சொல்ல மறந்த கதையும்.
உங்களால் முன்வைக்கப்பட்ட வட்டாரப்பிரிப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதோடு அதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் இன்னும் எங்களை ஏமாற்றுகிறது.
சம்மாந்துறை மக்களே இப்பதிவை உங்களது கட்சிகள் எனும் colour கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு வாசியுங்கள்.
முதலில் உங்களுக்கு எல்லாம் தெரிந்த ஒரு கதையை சொல்கிறேன். வடை சுட்ட கிழவியின் கதை. முதலில் சொன்னார்கள் காகம் வடையை வாயில் வைத்துகொண்டு பாட்டு பாடியது வடை கீழே விழ நரி எடுத்துக் கொண்டு ஓடியது. அங்கே காகம் ஏமாந்து நின்றது.
இரண்டாவது கதையில் காகம் வடையை காலுக்குள் வைத்து கொண்டு பாடியது அங்கே நரி ஏமாந்து சென்றது.
ஆனால் இரண்டு கதையிலும் உண்மையில் ஏமாந்து நிற்பது வடைசுட்ட கிழவி தான் என்பதை நாங்கள் உணர மறந்துவிட்டோம்.
உங்கள் வட்டார பிரிப்பானது சரியான விகிதாசாரத்தில் இடம்பெறவில்லை என்பதை உங்கள் ஆதரவாளர்களே ஏற்று கொள்கிறார்கள். அவர்களின் வாதம் இது பிழை என்றால் சரியானதை கொண்டு வா? என்பதே.
உங்களை கேட்டாலும் நீங்கள் சொல்லும் பதில் நான் பிரித்தது பிழை என்றால் சரியானதை கொண்டு வா என்பது. உங்கள் பேச்சிலும் நீங்கள் பிரித்தது சரி என்று நிரூபிக்கவும் இல்லை.
அடுத்தபக்கம் முஸ்லிம் காங்கிரசும் நீங்கள் செய்வது பிழை என்கிறார்களே தவிர சரியை சொல்லவில்லை..
இருவரும் நரி ஏமாற்றியது, காகம் ஏமாற்றியது என்ற கதைகள் சொல்கிறீர்களே தவிர உண்மையில் ஏமாந்து நிட்கும் வடை சுட்ட கிழவியாகிய மக்களை மறந்துவிட்டீர்கள்.
ஒரு shirt தைப்பதானால் டெய்லரிடம் தான் சொல்வோம். அவர் சட்டைக்கு துணியை வெட்டும்போதும் விடும் பிழை பொது மகனான எமக்கு விளங்காது. அவர் தைத்த சட்டையை போட்டு பார்க்கும்போது தான் ஒரு பக்கம் கை இறங்கி ஒரு கை நீளம், இன்னொரு கை கொட்டான், button கள் சரியான தூரத்தில் இல்லை, சில இடங்களில் சட்டை இறுக்கமாக இருக்குறது போன்ற பிழைகள் விளங்கும். அவர் தைத்த உடுப்பு பிழை என்று சொல்ல நாம் டெய்லராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தைத்த உடை பிழை என்று சொல்பவனிடம் நீ தைத்து காட்டு என்று சொன்னால் அது சரியான வாதமா? பொது மகனால் முடியாததை செய்வதற்கு தானே சிறந்த Tailor ஆகிய உங்களை தேர்ந்தெடுத்தோம்.
அதேபோல் ஒரு சத்திர சிகிச்சையை செய்ய சிறந்த ஒரு வைத்தியரை (Surgeon) தெரிவுசெய்து நோயாளியை ஒப்படைக்கிறோம்.
அவர் உடலை பிழையான முறையில் வெட்டி தைத்திருந்தால் அந்த பிழையை சுட்டிக்காட்டுபவர் ஒரு surgeon ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பாதிக்கப்பட்ட நோயாளியாகவோ அந்த நோயாளியின் உறவினராகவோ இருக்கலாம்.
அப்படி குற்றச்சாட்டு சொல்பவனிடம் கத்தியைக் கொடுத்து நீ surgery செய்து காட்டு என்று சொல்வது நியாயம் ஆகுமா?
மற்றவர்களை விட நீங்கள் சிறந்த Surgeon என்றுதானே உங்களிடம் ஒப்படைத்தோம். நீங்கள் அதை பிழையாக செய்துவிட்டு மற்ற Surgeon மாரிடம் சவால் விட்டு பேசுவது நீங்கள் பிழையாக செய்த surgery க்கு நியாயம் ஆகுமா?
உங்களுடன் இருந்த முந்தைய பிரதேச சபை உறுப்பினர் Sibly கூட வட்டார பிரிப்பை கூடஇருந்த எங்களுக்கே காட்டவில்லை. நம்பிக்கையாளர் சபையினால் இது பற்றி ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கி சமூகம் தரவில்லை என்ற குற்ற சாட்டுக்கும் உங்கள் பதில் என்ன. Link Below:-
திரு Nawshad Sir அவர்களே வட்டார பிரிப்பில் நொங்கு திண்டவர் நீங்கள். நீங்கள் தான் இதற்கு முதலில் பதில் தரவேண்டும். நோண்டி பார்த்தவர்களை குற்றம் சொல்லி நீங்கள் தப்ப முடியாது.
ஆக வடையை காகம் ஏமாற்றியது, நரி ஏமாற்றியது என்று கதை சொல்லுகிறீர்களே தவிர ஏமாந்த கிழவியை மறந்துவிட்டீர்கள்.
இதை திருத்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஏனைய பிரதேச சபைகளுடன் ஒப்பிடும்போதும் எமது சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ற வட்டாரங்கள் வழங்கப்படவில்லை.
இனியாவது பதவிக்கு வருவோர் இதனை சீர் செய்து காட்டுங்கள்.
இப்படிக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த மக்களில் ஒருவன்.