Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆசன பங்கீடு எவ்வாறு அமைய போகிறது.

இப்பதிவு கருத்து கணிப்பு என்ற பெயரில் வடை சுடுவோருக்கான விழிப்புணர்வுக்காகவும், மக்களின் வாக்களிப்பு வீதத்தை தூண்டுவதட்காகவும் மட்டுமே.

சம்மாந்துறை பிரதேச சபையின் மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 39027.
பொதுவாக சராசரியாக அளிக்கப்படும் வாக்குகள் 65 தொடக்கம் 75% வரை.
அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடி அற்றவை நீக்கினால் 70% செல்லுபடியானவை என கருதலாம். ( பிரதேச சபையை பொறுத்தவரை இது அதிகளவான வாக்களிப்பு வீதம் தான்)

எனவே சம்மாந்துறை பிரதேச சபையை பொறுத்த வரை செல்லுபடியாகும் வாக்குகள் 39027 × 0.7 = 27320 அண்ணளவாக.

இதனை மொத்த ஆசனங்களான 20 ஆல் பிரிக்கும்போது 1366 (தகைமை பெறும் எண்) எனவே சம்மாந்துறை பிரதேச சபைக்கு நிர்ணயிக்கபடும் ஒரு ஆசனத்தை உறுதி படுத்துவதட்கான அதிக பட்ச வாக்குகள் 1366 (+/- 100) (வாக்களிப்பு வீதம் வேறுபட இது மாறலாம்.)

எனவே ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையான 11 ஆசனங்களை உறுதி படுத்துவதானால் 2 தெரிவுகள்

Method 01. பல்தொகுதி வட்டாரம் உட்பட 9 வட்டாரங்களை வெல்ல வேண்டும். (ஒரு தனி வட்டாரத்தை மாத்திரமே தோற்க முடியும்.) கள நிலவரப்படி இது சாத்தியம் இல்லை.

Method 02. 11 ஆசனங்களுக்குரிய அதிக பட்ச வாக்குகளை பெறல்.
ஏற்கனவே சொல்லபட்டது போல் 70% ஆன வாக்களிப்பு நிகழ்ந்து இருந்தால் 
1366 × 11 = 15026 அதாவது 15026 என்ற வாக்குகளை பெற்றால் 11 ஆசனங்கள் உறுதி ஆகும். இதில் எத்தனை வட்டாரங்களை வெல்கிறார்கள் என்பது பொருட்டு அல்ல.

இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு நியாயமான கேள்வி வரும். வட்டார வெற்றி பொருட்டு இல்லையென்றால் விகிதாசார ஆசனங்கள் 8 தான் இருக்கும்போது எப்படி 11 ஆசனங்களை பெறுவது என்று.

அதுதான் மகான் கணக்கு..

ஒரு கட்சி 15026 வாக்குகளை பெறுவதானால் ஆக குறைந்தது 3 வட்டாரங்களையாவது வென்றால் தான் முடியும். இதனை நீங்கள் வாக்குகளை உங்கள் விருப்பம் போல வட்டாரங்களுக்கு பிரித்து போட்டு பார்த்தால் விளங்கும். 

அதே நேரம் எமது பிரதேச சபையில் தமிழ் வாக்குகள் 7500 இருந்து (Correct me if I am wrong) அதில் 70% அளிக்கப்பட்டால் 5250 வாக்குகள் கிடைக்கும்.

இதில் 4098 உதய சூரியன் போன்ற ஒரே கட்சிக்கு அளிக்கபட்டால் 3 ஆசனங்கள் இலகுவாக கிடைக்கும். ஒருவேளை இது இன்னும் கலைந்தாலும் 2 ஆசனமாவது கிடைக்கும். (இது அவர்களது வாக்களிப்பு வீதத்திலும் ஒரே கட்சிக்கு வாக்களிப்பதிலும் தங்கி உள்ளது. TNA கேட்டிருந்தால் இது சாத்தியம். அது இல்லாத படியால் சில மாற்றங்கள் வரலாம்.) அதே நேரம் 3200க்கு மேல் வாக்குகளை (விகிதாசாரத்தில்) பெற்று மல்வத்தை போன்ற தொகுதியை வென்றால் மொத்தம் 3 ஆசனம் என்பதும் தவறு. அங்கேயும் 2 ஆசனங்கள் தான். (ஏற்கனவே கணக்கில் சொல்லப்பட்ட உதாரணத்தை விளக்கினால் இது விளங்கும். தொகுதியில் 1 வருவதால் bonus 2 க்கு பதிலாக 1 தான் கிடைக்கும்.)

அடுத்து வரக்கூடிய கேள்வி.

தகைமை பெறும் எண்னால் கணிக்க படும் ஆசனத்துக்கு மேலகதிகமாக ஆசனங்களை ஒரு கட்சி பெற முடியாதா?  முடியும். உதாரணமாக தமிழ் வாக்குகள் 4100 ஒரே கட்சிக்கு அளிக்க பட்டால் 3 ஆசனங்கள் கிடைக்கும்.

அதே நேரம் வளத்தாப்பிட்டி (2030 Votes வட்டாரம்) , மல்வத்தை (2381 votes வட்டாரம்) வெற்றி கொண்டு பல்தொகுதி வட்டாரமான வீரமுனையையும் வெற்றி கொண்டால் ( வீரமுனை வட்டாரம் பல் அங்கத்துவ வட்டாரம். மொத்த வாக்குகள் 5941 முஸ்லீம் வாக்குகள் 4100 தமிழ் வாக்குகள் 1800. முஸ்லீம் கட்சிகளால் வாக்குகள் எதிர்காலத்தில் 3 ஆகவோ 4 ஆகவோ பிரிக்கப்பட்டு தமிழ் வாக்குகள் ஒரு கட்சிக்கு (TNA) அளிக்கப்பட்டால்)
விகிதாசாரத்தையும் மீறி 5 ஆசனங்கள் கிடைக்கும். Nothing is impossible. இதுவே எதிர் காலத்தில் எமது வட்டார பிரிப்பால் தின்ன இருக்கும் பருப்பு.

இதே போல்தான் சுதந்திர கட்சிக்கும் 1366 இன் பெருக்கங்களாக பெறும் ஒவ்வொரு block க்கும் ஒரு ஆசனம் உறுதி ஆகும். எந்த தொகுதியையும் வெற்றி பெறாமலேயே.

ஒரு கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பெறுமதி வாய்ந்தவை. அது வட்டாரத்தை வெல்ல உதவாவிட்டாலும் ஆசனங்களை தீர்மானிக்கும்.

பிரதான கட்சிகளில் ஒன்று தனித்து ஆட்சி அமைப்பதானால் அமோக வெற்றி பெற வேண்டும். அதாவது 70% அங்கீகரிக்கபட்ட வாக்குகளாக இருந்தால் 27320 இல் 15026 பெற வேண்டும். சத வீதப்படி 55%.

இல்லாத விடத்து 3வது நிலைக்கு வரும் கட்சி ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.

இதில் தெளிவு வேண்டின் வினவலாம்.

உங்கள் வாக்கு. உங்கள் ஆயுதம். Every Vote is Matters.

By Dr.Ziyad.A.I.A
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe