(எம்.எம். ஜபீர் )
இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலினால் கூட்டு அரசாங்கத்தினையோ ஜனாதிபதியையோ மாற்ற முடியாது இது ஒரு குட்டி தேர்தல் இந்த தேர்தலினால் கிராமத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளை பெரும்பாண்மை கட்சிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் இது கிராம மட்டத்தின் அபிவிருத்திக்கான தேர்தல் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் சாளம்பைக்கேணி வடக்கு 2ஆம் வட்டராத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.ஏ.இம்தியாஸை ஆதரித்து நேற்று (21)ஏற்பாடு செய்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பிறந்த சம்மாந்துறை தொகுதியில் நாங்கள் அனைவரும் பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும் ஏனென்றால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக இருக்கின்ற இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அந்த மாமனிதரால் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஒரு புகழ் பெற்ற கட்சியாக காணப்படுகின்றன.
இலங்கையில் வாழுகின்ற பெரும்பான்மையாக முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற கட்சி என்றால் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக இருக்கின்றது. இலங்கையில் எந்த மூலையிலும் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை தட்டிக் கேட்கின்ற திராணியும் சக்தியும் பெற்ற கட்சியாகும். இப்படியான கட்சியை வளர்த்து எடுக்க வேண்டியது எங்களுடைய தலையாய கடமையாகும் பிரச்சினையான காலங்களில் மக்கள் அல்லோலப்பட்டு இருக்கின்ற போது பாதுகாப்பை உறுதி செய்ததும் இந்த கட்சி தான்.
தற்போது நாட்டில் நல்லாட்சியை கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். இப்படி இனங்களுக்கிடையே நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது இந்த அமைதி நிரந்தர அமைதியாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. அதற்கு முழு பாராளுமன்றமும் அரசியல் அமைப்பு சபையாக மாற்றமடைந்து காணப்படு;கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டியது முஸ்லிம்களாகிய நாம் அனைவருக்கும் கடமையாக இருக்கின்றன.
இந்த தேர்தலை பொறுத்தமட்டில் குட்டி தேர்தல் என்றாலும் கிராம மட்ட அபிவிருத்திகளை செய்கின்ற தேர்தலாக கணிக்கப்படுகின்றது. இந்த பிரதேசத்தில் கோடிக்கணக்கான நிதிகளை கொண்டு வந்து அபிவிருத்தி செய்துள்ளதுடன் தொடர்ந்தும் செய்து கொண்டே வருகின்ற எமது கட்சியை நாம் யாரும் மறந்துவிட முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இம்முறை உங்கள் பிரதேசத்திதில் களம் இறங்கியுள்ளது. அவர்களை ஆதரித்து எமது பிரதிநிதிகளை வெற்றி பெற செய்வதன் மூலம் கிராமத்தின் அபிவிருத்திகள் உறுதிப்படுத்தப்படும என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாளம்பைக்கேணி மத்திய குழுவின் செயலாளர் மீரார் ஹாஜியார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நாவிதன்வெளி பிரதேசத்திற்கு முதல் முதலாக கொண்டு வந்த அன்றைய இளைஞர் ஏ.எல்.ஏ.சித்தீக், நூராணியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் செய்யின் ஹாஜியார், வேட்பாளர்களான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.தஜாப்தீன், வேட்பாளர் எம்.வீ.நபாஸ் வேட்பாளர் எம்.எச்.அலியார் விகிதாசார பட்டியல் வேட்பாளர் லாபீர், மகளிர் சங்க பிரதிநிகள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.