Ads Area

மஜிட்புர பாடசாலையை உங்கள் கண் திறந்து பாருங்கள் இங்கே குறைகள் ஏராளம்.

நன்றி - பாரிஸ்
நமது மஜிட்புர நலன் விரும்பிகள் அமைப்பு.

மஜீட்புர பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் ஊர் நிலமையை சம்மந்துறை சகோதரர்கள் கட்டாயம் அறிந்திருப்பது அவசியம் ஏனென்றால் மஜீட்புரம் ஏதோ வேற்றுக் கிராமம் இல்லை அதுவும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ்தான் உள்ளது ஆகவே நமது மஜிட்புர கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது சம்மாந்துறையில் உள்ள அரசியல்வாதிகளதும், உயர் அதிகாரிகளதும் பாரிய பொறுப்பாகும்.

மஜீட்புரத்தில் உள்ள வீதிகள் முதல் கொண்டு பாடசாலைகள், பள்ளிவாசல்கள் என அனைத்தும் கவனிப்பாரற்றே காணப்படுகின்றது இதில் பிரதான இடம் பிடித்திருப்பது மஜிட்புர பாடசாலையாகும் மஜீட்புர பாடசாலையில் கீழே குறிப்பிடப்பட்டள்ள குறைபாடுகள் இன்னும் நிபர்த்திக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு அல்லது நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


மஜீட்புர பாடசாலையின் குறைபாடுகள்.

1. Computer lab - இருக்கின்றது ஆனால் அதற்குரிய உபகரணங்களும், ஆசிரியர்களும் இல்லை.

2. Library - இருக்கின்றது ஆனால் அதற்குரிய உபகரணங்களும், நூல்களும் இல்லை.

3. Science lab - இருக்கின்றது ஆனால் அதற்குரிய உபகரணங்களும், ஆசிரியர்களும் இல்லை.

4. Singala Teachers - இல்லை இது நமது முஸ்லிம் மாணவர்களுக்கு அவசிமான பாடம். நமது நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு.

5. Stage - இல்லை. எத்தனை காலத்துக்குத்தான் நாங்களும் புளியமரத்துக்கு கீழே மேடையமைப்பது.

6. Playground - இருக்கின்றது. ஆனால் Cricket, Football & Volleyball விளையாடுவதற்கு சரியான pitch இல்லை!

7. Children's Park - இல்லை. எமது ஊர் பாலர் பாடசாலை பிள்ளைகள் விளையாடுவதற்கு!

8. Nursery School - இருக்கின்றது ஆனால் அங்கு கற்றல், விளையாட்டு சம்மந்தமான உபகரணங்களும், தளபாடங்களும் கிடையாது மஜீட்புர பாடசாலை எல்லைக்குள்தான் இந்த Nursery School அமைந்துள்ளது. 

9. இந்த Nursery School லை சுற்றி மதில்கள் கிடையாது அதற்கு தனியான ஒரு வழி (Entrance) இல்லை.

ஆகமொத்ததில் எல்லாம் இருக்கு ஆனால் இல்ல! 

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விடையங்களை பாடசாலை அதிபர் நினைத்தால் இந்த குறைபாடுகளை சரி செய்ய முடியும் காரணம் " அதிபருக்கு அரசியல் செல்வாக்கு இருக்கின்றது. 

அத்துடன் இந்த அதிபர் இதே பாடசாலையில் படித்து பட்டம் பெற்று இதே பாடசாலையில் முப்பது வருடங்களுக்கு மேல் ஆசிரியராக பணியாற்றி. தற்போது பதவி உயர்வு பெற்று அதிபராக பனியாற்றுகின்றார்.

இதனை மஜிட்புர பாடசாலை  அதிபர் கவனத்தில் எடுத்து உரிய அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இதனை முறையிட்டு தீர்வு பெற்றுத் தர வேண்டும் இது எங்கள் வருங்கால சந்ததியினருக்காக.....!

ஏனென்றால் கிராமங்கள் சகல துறைகளிலும் நிரந்தர முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் முதலில் கிராமங்கள் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும். கல்வி வளர்ச்சி ஊடாகவே நிலையான அபிவிருத்தியை நாங்கள் அடைய முடியும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe