நிலைபேண் தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் "போதை பொருளை ஒழிப்போம் சமுதாயத்தை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் இன்று (2018-02-26) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் போதைப் பொருள் தடுப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. முஹம்மத் இஸ்மாயில் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபரினால் மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனை தொடர்பான தீங்குகள் குறித்தும் அதனோடு தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டதோடு
“ என் உயிர் உள்ள வரை நான் போதைப் பொருட்களைப் பயண்படுத்த மாட்டேன் என்றும், பயண்படுத்துவோருக்கு உதவியா இருக்க மாட்டேன் என்றும், போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டோரை அதிலிருந்து மீட்டெடுக்க பாடுபடுவேன் என்றும் இத்தால் வாக்குறுதி அளிக்கின்றேன்”
என்று ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் உறுதி மொழி கூறப்பட்டு கையெழுத்தும் இடப் பட்டது.
“போதைப் பொருளற்ற தேசம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் “கிராமங்களை கட்டி எழுப்புவோம்” எனும் தேசிய நிகழ்வு அண்மையில் இரத்தினபுரி எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
போதைப் பொருள் பாவனையே இலங்கையில் வறுமை அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணம் என்றார் மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அரச அனுமதி பெற்ற மதுபாவனை நிலையங்களூடாக பெறப்பட்டுள்ள தகவல்களின் படி மாதம் 3,000,000,000 (300 கோடி ரூபாய்களை) இரத்தினபுரி மாவட்ட மக்கள் போதைப் பொருளுக்காக செலவிடுவதாகவும், கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 700 கோடி ரூபாய்களை மாதாந்தம் மக்கள் செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை சனத்தொகையில் சுமார் 40% வீதமானோர் 60 இலட்சம் பேர் மதுபாவனை பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அது தொடர்பான நோய்களால் வருடாந்தம் சுமார் 7500 பேர் இறக்கின்றனர். அந்த வகையில் உலகில் மது பவனில் இலங்கை நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதேவேளை சனத்தொகையில் சுமார் 30% மானோர் புகைக்கின்றனர், 40,000 பாடசாலை மாணவர்கள் உற்பட, வருடாந்தம் சுமார் 13100 பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.
என்றும் அந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் உரையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.