Ads Area

“சம்மாந்துறை அஸீஸ் காக்கா” என்றழைக்கப்படும் கவிஞர் பற்றிய அறிமுகம்.

தகவல் - சுலைமாலெப்பை அபூபக்கர் 

சம்மாந்துறையில் உள்ள சிறந்த கவிஞரும் கலைஞருமான ஆத ம்வாவா அப்துல் அஸீஸ் என்னும் 'சம்மாந்துறை அஸீஸ் காக்கா அவர்களை அதிபர் திரு. சுலைமாலெப்பை அபூபக்கர் அவர்களின் குறிப்புக்கள் ஊடாக அறிமுகம் செய்வதில் சம்மாந்துறை 24 இணையத்தளம் மகிழ்சியடைகின்றது.

'சம்மாந்துறை அஸீஸ் காக்கா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர் சிறுவயதில் இருந்தே கலை உணர்வும் ஹாசிய கதைகள் கூறுவதிலும் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கண்டவர் இவரது பாடசாலை காலத்தில் இலக்கிய மன்றம் களில் இவருடைய பங்கேற்பு கூடுதலாக இருக்கும் இவரது ஆக்கங்களை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

அந்த காலத்தில் நவீன வசதிகளுடன் உள்ள ஊடகங்கள் இல்லாத காலம் சம்மாந்துறை யில் இரண்டு இடத்தில் மாத்திரம் வானொலி பெட்டி அரசாங்கத்தால் வைக்கப் பட்டிருந்தது ஒன்று சின்னப்பள்ளி மத்தரசா உள்ள இடம் மற்றது கூழப்பா சந்தியிலும் இருந்து இந்த காலகட்டத்தில் இவர் இலங்கை வானொலியில் தொடர்பு ஏற்படுத்தி தனது ஆக்கங்களை அந்த வானொலியில் வெளியிட்டவராவார்.

இவர் சம்மாந்துறையின் சிறந்த கலைஞர் என்பதோடு சிறந்த வியாபாரியாகவும் திகழ்வது கூடுதல் சிறப்பாகும். தான் செய்யும் வியாபாரம் கண்ணியமாக இருக்கும் வகையில் நியாயமான விலையில் பொருட்களை விற்று வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றவராவார்.

தனது வேலைப்பழுவுக்கு மத்தியிலும் கூட தனது எழுத்து ஆர்வத்தை அவர் ஒரு போதும் விட்டதில்லை  எங்கு அநீதி ஏற்பட்டாலும், எங்கு சமூக அவலங்கள் ஏற்பட்டாலும் அதனை தனது எழுத்தாற்றல் மூலம் சுட்டிக்காட்ட இவர் ஒரு போதும் தவறுவதில்லை.

இவர் சமூகத்தில் காணப்படும்  குறை நிறைகளை வைத்து எழுதிய ஆக்கங்களை ஒன்று திரட்டி  "கடையில் பூத்த கவிதைகள் " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் வெளியீடு செய்துள்ளார்.

இவ்வாறு பல முன்மாதிரி களை செய்த இயற்கைவாதியான இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் சமூகத்திற்கு ஏற்பட்ட குறை களையும் எழுத உத்தேசித்துள்ளார்.

குறிப்பு - சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என எத் துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் அவர்களை எங்களது இணையத்தளம் ஊடாக ஊர்-உலகிக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தொடர்புகளுக்கு - sammanthurai24@gmail.com 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe