அம்பாறை நகரில் இன்று (27.02.2018) இரவு 12.30 மணி அளவில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட வர்த்தக நிலையங்கள் மீது சில காடயர்கள் தாக்குதல் மேற்கொண்டு வீதியில் கிடந்த பல வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தகராறை தொடர்ந்து ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பிறகு குழுமி வந்த காடையர்கள் பள்ளிவாசல் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல வாகனங்களுக்கும் கடைகளுக்கும் தாக்கி சென்றுள்ளனர். தீ வைத்து எறித்துள்ளனர். முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் திருக்குர்ஆன் பிரதிகளையும் தீ வைத்துக் கொழுத்தி முடிந்தால் உங்கள் அல்லாஹ்வை வந்து காப்பாற்றச் சொல் என்று கடும் இனவாத்த்தை கக்கிச் சென்றுள்ளனர்.
ஹோட்டல் உரிமையாளருடன் நடந்த தகராறு அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலை தாக்கும் அளவிற்கு ஏன் சென்றது? குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அளவிற்கு ஏன் சென்றது? ஹோட்டல் பிரச்சனையை ஹோட்டலுடன் நிறுத்திக் கொள்ளாமல் அப்பகுதியைச் சேர்ந்த அனைவர் மீதும் அனைத்தும் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கு ஏன் சென்றது? ஹோட்டல் உரிமையாளர் குற்றவாளியாகவே இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர பிரச்சனை இந்த அளவு விசாலமாக்குவதற்கு எந்த தேவையுமில்லை. இது தெளிவான இனவாதமே! இவ்வாறு தான் எல்லா இனவாத தாக்குதல்களுக்கும் ஏதோ ஒன்றை காரணமாக்கி அலுத்கமை, கின்தொட்டை, அம்பாறை என பட்டியல் நீடிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனையும் அடிப்படையற்ற ஒரு பிரச்சனயாகும். உணவில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தும் சிலர் களவரத்தை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடியுள்ளனர். சாப்பிடும் உணவில் மருந்து மாத்திரை மூலமோ, உள்ளாடைகளில் ஜெல்களை பயன்படுத்துவதன் மூலமோ வேறு விதமான வழிகளின் மூலமோ இவ்வாறு கருத்தடை ஏற்படுத்த முடியாது என்று பேராதனை பல்கலைக்கழக விசேட குழந்தை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆரியசேன யூ. கமகே அவர்கள் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் டீ வீ நிகழ்ச்சிகளிளும் தெளிவாக அறிவித்துள்ளார். எனவே உணவில் கருத்தமை மாத்திரை பயன்படுத்தி சிங்கள பெரும்பான்மை மக்களை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது பொய்யான அடிப்படையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பதுடன் இப்பிரச்சனையை கிழப்பி முஸ்லிம்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதும் குறித்த சம்பவம் தெள்ளத் தெளிவாக நரூபித்து காட்டியுள்ளது.
அடுத்ததாக, நள்ளிரவு 12 மணிக்கு நூற்றுக் கணக்கான மோட்டார் சைக்கில்களிலும் ஒரு பஸ் வண்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படையெடுத்து வரும் வரை இலங்கை காவல்துரை என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவம் நடந்த இடத்திற்கும் அம்பாறை பொலிஸுக்குமு இடையில் தொளைவு சுமார் 500 மீட்டர் மாத்திரம் இருக்கும் நிலையில் எல்லா அடாவடித்தனங்களும் அரங்கேற்றப் பட்டு முடிந்த பின்னர் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் அங்கே வருகை தந்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக நேற்று முன்தினம் தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன அவர்களும் பதவியேற்றுள்ளார்கள். இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடத்துள்ளதை நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இருவரும் கண்டிக்க வேண்டும் என்றும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.
இது போன்ற இனவாத தாக்குதல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு ஏற்பாடுகள் செய்தாலும் அதற்கான நிரந்தர தீர்வு முறைப்படி எடுக்காத காரணத்தினால் தான் மீண்டும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எனவே நல்லாட்சி அரசு தற்காலிக் தீர்வுகளை நாடாமல் முறையான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்வும் குறித்த சம்பவத்தின் சூத்திர தாரிகளை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை அரசை வலியுறுத்துகிறது.
அன்புடன்,
எம்.எச்.எம் ரஸான் Dip.In.I.Sc
செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.