தகவல் - அக்ரம் முஹம்மட்.
சம்மாந்துறையில் உள்ள பிரதான வங்கிகளில் ஒன்று இலங்கை வங்கியாகும் இவ் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள ஏ.டீ.எம். இயந்திரமானது போதிய அளவு பணம் இல்லாதும், சரியான முறையில் இயங்காதும் தொடர்ச்சியாக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக வங்கி நிருவாகத்தினர் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருவதாகவும் ஊர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்ற மாதத்தின் இறுதி வாரங்களில் இவ்வாறான இடையூறுகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான அசெகரியங்கள் குறித்து இலங்கை வங்கி நிர்வாகத்தினரிடம் கடந்த மாதமும் தெரியப்படுத்தியும் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.