Ads Area

சம்மாந்துறை வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியொருவரின் போற்றத் தக்க செயல்.

தகவல் -Dr. முஹம்மட் றிஸ்வான்.

சம்மாந்துறை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும்  R.ருத்ரகாந்தி பொன்னம்பலம் அவர்களால் இன்று ( 03/03/2018) 85 கட்டில் உறைகளை (Bed sheaths) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதிகளுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வைத்திய சாலையின் முதல் தாதியர் பரிபாலகி  R.ருத்ரகாந்தி  அவர்கள் சிறந்த தாராள மனம் படைத்த சமூக சேவகியாவார், சம்மாந்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் ஏனைய தாதியர்களையும் சிறந்த முறையில் வழி நடாத்தும் இவர்,  தாம் வேலை செய்யும் வைத்தியசாலையின் தேவை அறிந்து ஒரு முன்மாதிரியான, ஏனையவர்களுக்கும் தாங்களும் நமது வைத்தியசாலைக்கு உதவி செய்யவேண்டும் என்று தூண்டுகின்ற அதிகமான சேவைகளைச் சம்மாந்துறை வைத்தியசாலைக்குச் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் இவர் சம்மாந்துற வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு ஒரு குடிநீர் சுத்திகரிப்பானையும் வழங்கிஇருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவரின்  இச்சேவைகளைப்  சம்மாந்துறை வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஊழியர்கள்,  நலன் விரும்பிகள், ஊர் மக்கள் என அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது மக்களின் தேவை அறிந்து நல்ல பெயரை வைத்துக் கொண்டு ஏ தரமும்  உயர்த்தப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 





















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe